‘ஹெல்மெட்’ அணியாத 102 போலீசார் மீது வழக்கு

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தாலும் அதை மீறுகிறவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இதன் காரணமாக பலர் ஹெல்மெட் அணியாமல் செல்வது வாடிக்கையாக இருந்தது. சில போலீசாரும் ஹெல்மெட் அணியாமல் சென்று வந்தனர்.
ஐகோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு வந்தபோது நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தால் என்ன? இதில் கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குவது ஏன்? என்றும் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சென்னையில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். ஹெல்மெட் அணியாமல் போலீசார் வந்தால், அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீஸ் கமி‌ஷனர் விசுவநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து ஏராளமான போலீசார் தற்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர்.
ஆனாலும் ஒரு சில போலீசார் அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்துவிடுகின்றனர். வாகன சோதனையில் சிக்கும்போது போக்குவரத்து போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துவிடுகின்றனர். சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்த 102 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment