சியோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி   பிற்பகல் இந்த விஜயத்தை மேற்கொண்டார்.
தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதியை, பிரதம திருத்தந்தையான ரொஷான் மகேஷன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
கொடிய பயங்கரவாத தாக்குதலினால் சேதமடைந்த தேவாலயத்தை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, தேவாலயத்தின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாண கட்டளை தளபதி உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த துன்பியல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தின் பிரதம திருத்தந்தை உள்ளிட்ட திருத்தந்தைகளுக்கும் பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் ஜனாதிபதி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.
இந்த விஜயத்தில், அமைச்சர் தயா கமகே, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரிகளும் இணைந்துகொண்டனர்.



Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment