களனி பல்கலைக்கழகம் மறு அறிவித்தல்வரை இன்று காலை 10.00 மணி முதல் மூடப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பீடங்களும் உடனடியாக மூடப்பட்டுள்ளதாகவும் நிருவாகம் தெரிவித்துள்ளது.
இப்பல்கலைக்கழகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணத்தினால், பல்கலைக்கழகத்தினதும், மாணவர்களினதும், நிருவாகத்தினரதும் பாதுகாப்புக் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
விடுதிகளிலிருந்து முடிந்தளவு விரைவாக மாணவர்களை வெளியேறுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வார இறுதியில் நடைபெறும் பிரத்தியேக விரிவுரைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் பல்கலை நிருவாகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment