திமுக ஆட்சி காலத்தில் மின்சார பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக மாற்றப்பட்டது போல தண்ணீர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு தர்பூசணி, மோர், இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
தண்ணீர் பிரச்சினை தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இருக்கிறது. நிலத்தடி நீரின் அளவும் குறைந்து வருகிறது. இதற்கு தீர்வு காண நதிநீர் இணைப்புத் திட்டம் மிக முக்கிய திட்டமாகவுள்ளது. இந்தத் திட்டத்தை மோடி அரசு நிறைவேற்றும்.
தேர்தலுக்குப் பின்னர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மக்கள் பணியில் முழுக் கவனம் செலுத்துவார்கள். எதிர்கட்சிகள் வாக்குச் சாவடிகளிலோ முறைகேடு நடக்கிறது என குற்றம்சாட்டி வருகின்றனர் இதற்கு மாறாக நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற்றது.
மோடி அரசு மீண்டும் ஆளும். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி தொடரும். தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்குள் தேர்தல் முடிவுகள் அறிவித்தால் இந்த குழப்பம் இருக்காது.
தமிழகத்தில் உள்ள தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க அனைத்து இடங்களில் தூர்வாரி, பாரவூர்தி மூலம் தண்ணீர் வழங்கப்பட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்-என்றார்.
0 comments:
Post a Comment