நவ சிங்களே தேசிய அமைப்பாளர் டான் பிரியசாத் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தடுப்பு பிரிவினர், மீதொட்டமுல்லையில் அமைந்துள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்த போது, அவர் அங்கு இல்லாத நிலையில், வழக்கறிஞர் ஒருவர் மூலமாக டான் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மகசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க இன்று காலை கைது செய்யப்பட்டிருந்ததுடன், நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment