இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குப் படகு மூலம் தப்பிச் செல்ல முற்பட்ட மூவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7.00 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சவுக்கடி கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாதவர்களின் நடமாட்டத்தை அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய 13 பேர் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிலாபத்தைச் சேர்ந்த இரண்டு பெருன்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் வந்தாறுமூலையையைச் சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த மூவரும் பயணப்பொருள்களுடன் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களை ஏற்றிவந்ததாகக் கருதப்படும் முச்சக்கர வண்டியொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment