இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
Undp நிறுவனம் சர்வோதய நிறுவனம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
சர்வோதய நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் எஸ் சத்தியகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர், தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவுச் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் மற்றும் சர்வோதயம் undp நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மாந்தை கிழக்கு ஒட்டுசுட்டான் கரைதுறைப்பற்று புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர்கள் பங்குபற்றினர்.
0 comments:
Post a Comment