பல லட்சம் பணம் கேட்டு தனது சகோதரி தன்னை மிரட்டுவதாக தடகள வீராங்கனை டுட்டீ சந்த் குற்றம்சாட்டி இருக்கிறார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஓட்டப்பந்தைய வீராங்கனை டுட்டீ சந்த், சில தினங்களுக்கு முன்னர், தான் ஓரினச் சேர்க்கையாளர் என்று கூறி அதிர வைத்திருந்தார்.
இந்த நிலையில் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெரிவித்ததாவது,
எனது சொந்த சகோதரியே 25 லட்சம் ரூபாய் கேட்டு என்னை மிரட்டுகிறார். ஒரு முறை தன்னை அவர் அடித்தும் விட்டார். அது தொடர்பாக பொலஸில் முறைப்பாடு செய்துள்ளேன்.
சகோதரி மிரட்டியதாலேயே எனது ஓரினச் சேர்க்கை உறவு குறித்து வெளியே சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டடேன் - என்றார்.
0 comments:
Post a Comment