யாழ்.கொழும்புதுறைப் பகுதியிலுள்ள வீடொன்றின் மலசலகூட குழியில் இருந்து 7 கைக்குண்டுகள் இன்றையதினம் மீடகப்பட்டுள்ளன.
கொழும்புத்துறை சுவாமியார் வீதியில் உள்ள வீட்டின் மலசலகூட குழி நிரம்பியதையடுத்து வீட்டுக்காரர்கள் மலசல கூட குழியை துப்பரவு செய்தனர்.
இதன் போது மலசலகூட குழிக்குள் மர்ம பொருள்கள் இருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து யாழ்.பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த குழிக்குள் இருந்து 7 கைக்குண்டுகளை மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்க வைக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தனர்.
0 comments:
Post a Comment