தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்து வெளிவந்த 'சீமராஜா' படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவியது. இயக்குநர் பொன்ராம், சிவகார்த்திகயேன் கூட்டணி 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' போல மீண்டும் ஒரு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றியது.
சிவகார்த்திகேயன் அடுத்து நடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' படம் நாளை வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயன் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட இந்தப் படத்துக்காக 50 சதவீதம் குறைவாக வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.
சுமார் 30 கோடி வரையிலும் படத்திற்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாம்.
மிஸ்டர் லோக்கல் படத்தை முழுவதும் என்டர்டெயின்மென்ட்டாக உருவாக்கியருக்கிறேன் என படத்தின் இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்களின் வியாபரத்திற்கு பேருதவியாக இருக்கும்.
0 comments:
Post a Comment