காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் .
தனது பயணத்தை சன் என்ற தொகுப்பாளராக ஆரம்பித்த ஐஸ்வர்யா ராஜேஷ் காக்க முட்டை படத்திற்கு முன்பு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், காதல் வலையில் விழுந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஒரு பிரபல நடிகருக்கு தம்பியாக நடித்த ஜூனியர் நடிகர், ஐஸ்வர்யா ராஜேஷின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இரு வீட்டார் சம்மதத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷின் திருமண அறிவிப்பு, வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment