இலங்கை யுத்தத்தில் உயிரிழந்த ஈழத்தமிழர்களை நினைவுகூரும் முகமாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுக்கூரும் இந்நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
குறித்த அறிக்கையில் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் சர்வதேச சமூகத்திற்கு ஏற்ப ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஆதரவோடு இலங்கையில் தமிழர்களின் மண்ணை மீட்கவும், மக்களை காக்க உறுதியேற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment