கெக்கிராவை மடாடுகம பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை, அப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் சிலரும், பிரதான பள்ளிவாசல் உறுப்பினர்கள் சிலரும் இணைந்து உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் குறித்த காணி நூலகம் ஒன்றுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டு நிதி உதவியில் குறித்த பள்ளிவாசல் கட்டப்பட்டதாகவும், அதில் தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் பள்ளியை உடைத்தவர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்பொழுது நாட்டில் காணப்படும் சூழ்நிலைகளுக்கு அமைய மேலும் ஒரு பள்ளிவாசல் தேவையில்லை எனவும், அங்குள்ளவர்கள் பிரதான பள்ளிவாசலில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment