நயன்தாராவும், த்ரிஷாவும், அமலாபாலும் இப்போது ஹீரோக்களுடன் டூயட் பாடும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது தமன்னாவும் சேர்ந்திருக்கிறார்.
தமன்னா சோலோ ஹீரோயினாக நடிக்கும் படத்தை ஈகிள் ஐ புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹித் வெங்கடேசன் இயக்குகிறார். படத்தில் ஹீரோ கிடையாது.
தமன்னாவுடன் யோகி பாபு, முனீஸ்காந்த், சத்தியன், காளி வெங்கட் உள்ளிட்ட பல காமெடியன்கள் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இது திகில் கலந்த நகைச்சுவை படம். சென்னை மற்றும் காரைக்குடியில் படப்பிடிப்பு நடக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment