புராதன கால மண்பாண்டத்தில் கிடைத்த 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பீர் மற்றும் மேட் பானங்களை இஸ்ரேல் விஞ்ஞானிகள் தயாரித்து அசத்தியுள்ளனர்.
இஸ்ரேல் எல்லைக்குள் அமைந்துள்ள பண்டைய எகிப்து, பாலஸ்தீன் மற்றும் ஜீடானை சேர்ந்த கிபி 3000 இருந்து கிபி 4 ஆம் நூற்றாண்டிற்கு உட்பட்ட மண் பாண்டங்களில் உள்ள நுண் துளைகளில் இருந்த ஈஸ்ட்டுகளை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர்.
இந்த ஈஸ்ட்டுகளைக் கொண்டு புராதனகால சுவையை அறிந்துகொள்ளும் நோக்கில் நவீன செய்முறைப்படி பீர் மற்றும் மேட் பானங்களை இஸ்ரேல் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
ஹெப்ரூ பல்கலைகழக நுண்ணுயிரியலாளர் மைக்கெல் க்லுஸ்டைன் கூறுகையில், “இதன் மூலம் நாங்கள் கண்டுபிடித்தது என்னவென்றால் ஈஸ்ட்டால் மிக நீண்ட காலத்திற்கு உணவில்லாமல் வாழ முடியும் என்பதைத்தான்” என்றார்.
மேலும், பாலஸ்தீனப் பகுதியில் இருந்து புராதன கால பத்திரிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான பீரை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மண்பாண்டத்தைக் கண்டெடுத்த தொல்லியலாலர் அர்ன் மேய்ர் கூறுகையில்,
“ஜுராஸிக் பார்க் திரைப்படத்தில் டைனோசரஸ் விஞ்ஞானிகளை விழுங்கும் இங்கு விஞ்ஞானிகள் டைனோசரஸை குடிக்கிறார்கள்” என்றார்.
0 comments:
Post a Comment