காங்கேசன்துறை கடற்பரப்பில் ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இருவர் , மன்னாரைச் சேர்ந்த ஒருவர் அடங்கலாக மூவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதலின் போதே கஞ்சாவுடன் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 77 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்ப்படையினர் மற்றும் தேசிய போதை தடுப்பு பிரிவினர் இணைந்து இந் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
0 comments:
Post a Comment