வனப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப் பரவலால் பல்லாயிரம் மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கனடாவின் அல்பெர்டா ((Alberta)) மாகாணத்தில், வனப்பகுதியில் கடந்த இரு தினங்களாக தீப்பற்றி எரிந்து வருகிறது.
சுமார் 97 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தீ கொளுந்துவிட்டு எரிந்து புகை மண்டலமாக காட்சியளித்து வரும் நிலையில், உலங்கு வானூர்திகள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் 300க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டுத்தீ மேலும் பரவ வாய்ப்புள்ளதால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment