மாணிக்கக்கல் அகழ்வு குழியில் வீழ்ந்து ஒருவர் பலி

இரத்தினபுரி - நிவித்திகலை பிரதேசத்தில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட நபரொருவர் அக்குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிவித்திகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலஸ்வலை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட நபரொருவர், அந்த குழியில் வீழ்ந்து கவலைக்கிடமான நிலையில் வத்துப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய மலவிசூரியகே துமிந்த மலவிசூரிய எனப்படுபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனுமதியுடனே மாணிக்ககல் அகழ்வுகளில் ஈடுப்பட்டள்ளனர் என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் வத்துப்பிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment