தமிழிசை சவுந்திரராஜனுக்கும் - காயத்திரி ரகுராமுக்கும் மோதல்



பிரபல நடிகை காயத்ரி ரகுராம், தீவிர பா.ஜ., ஆதரவாளர்; மோடியின் ஆதரவாளர். சில ஆண்டுகளுக்கு முன் அவர் திடுமென பா.ஜ.,வில் இணைந்தார். பா.ஜ.,வில் அவருக்கு கலைப்பிரிவில் பதவியும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவருக்கும் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால், கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து அவர் ஒதுங்கி இருந்தார். இந்த சூழலில், அவர் அரசியலில் இருந்து விலகி இருக்கப் போவதாக டுவிட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார்.

டுவிட்டர் பதிவில் காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது: வெறும் வாக்குவாதமும், மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக, அரசியல் இன்று மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ளது. தொண்டர்களை வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. அதனால் கட்சியில் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.

மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை. யாரையும் ஆதர்சமாகப் பார்க்க முடியவில்லை. இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து விட்டது.

சினிமாவைவிட, அரசியலில் நடிகர்கள் அதிகம் இருக்கின்றனர். போலியான போராளிகள்; போலித் தலைவர்கள்; போலித் தொண்டர்கள்; போலி உறுப்பினர்கள். இதுதான் கடைசியில் கிடைக்கப் பெறுகிறோம். என்னால், 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. அதுதான் அரசியல் என்றால், அதை செய்யவும் முடியாது.

அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரமே. பேராசை, தந்திரபுத்தி என எல்லாம் எதிர்மறை விஷயங்களே. நான், இப்போதைக்கு வெளியிலிருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, இன்னும் கற்றுக்கொள்ள கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொள்கிறேன். தீவிரமாக இறங்குவதற்கான நேரம் இதுவல்ல என்பதை உணர்கிறேன். இது எனது தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment