பேட்டி என்றாலே ஆரம்ப காலத்திலிருந்து இந்தக் காலம் வரைக்கும் நடிகைகளிடம் பலரும் கேட்கும் ஒரே கேள்வி, 'நீங்கள் நடிக்க வரவில்லை என்றால் என்னவாகியிருப்பீர்கள்' என்பதுதான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படி ஒரு கேள்வி நடிகை தமன்னாவிடம் கேட்கப்பட்டது. அதற்குத் தமன்னா 'டாக்டர் ஆகியிருப்பேன்' என்று பதிலளித்திருக்கிறார்.
தமன்னாவின் உறவினர்கள் பலரும் மருத்துவர்களாக இருக்கிறார்களாம். அதனால்தான் தானும் மருத்துவராகியிருப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
2005 இல் 15 வயதில் நடிக்க வந்தவர் தமன்னா. இந்த 14 வருடங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment