எம்மால் வெளியிடப்படும் சில முக்கியமான தகவல்களினால் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஞானசார தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“நாளையும், நாளை மறுதினம் சில முக்கியமான தகவல்களை வெளியிடவுள்ளோம். இவ்விடயங்கள் அனைவர் இடத்திலும் பதற்றத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்புள்ளது.
ஆனாலும் அனைவரும் அமைதியான முறையில் சிந்தித்து செயலாற்ற வேண்டும். இதேவேளை இளைஞர்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு தூரநோக்குடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும்.
அந்தவகையில் பிரச்சினைகளை ஏற்படுத்திகொள்ளாமல் பொறுமையுடன் இருக்க வேண்டும் இல்லாவிடின் நஷ்டம் நமக்கே ஏற்படும்” என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment