திரிஷா நடித்த சதுரங்க வேட்டை-2, கர்ஜனை என்ற இரு படங்களும் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன.
இதேவேளை 1818, பரமபதம் என கைவசம் உள்ள படங்கள் வெவ்வேறு தயாரிப்பு நிலைகளில் இருக்கின்றன.
இந்த நிலையில், சரவணன் இயக்கத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் திரிஷா. ஏ.ஆர்.முருகதாசின் கதை, வசனத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.
ஏப்ரல் மாதம் ஆரம்பித்த முதல் கட்ட படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் நிறைவடைந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது.
இப்படத்திற்கு ‘ராங்கி’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
0 comments:
Post a Comment