காதல் மனைவியை அவர் பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்ற அதிர்ச்சியில் மாப்பிள்ளை விஷம் குடித்த சமபவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது.
மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தெலுங்கானா மாநிலத்தின் சூர்யபெட் நகரைச் சேர்ந்தவர் நவீன் ரெட்டி. இவரும் விஜயலட்சுமி என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
விடயம் அறிந்த விஜயலட்சுமியின் பெற்றோர் இரு தினங்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் நவீன் குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டையடுத்து, விஜயலட்சுமி மற்றும் நவீனை பொலிஸார் அழைத்தனர், அங்கு சமாதானம் பேசி மனைவியை தன்னுடன் பொலிஸார் அனுப்பி வைப்பார்கள் என நவீன் நினைத்துள்ளார்.
எனினும் விஜயலட்சுமியை அவரின் பெற்றோருடன் பொலிஸார் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அதிர்ச்சியில் உறைந்த நவீன் பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்து மயங்கினார். பின்னர் உடனடியாக பொலிஸார் நவீனை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மனைவியை தன்னிடம் இருந்து பிரித்த ஏக்கத்தில் பொலிஸ் நிலையத்திலேயே நவீன் விஷம் குடித்தது பெரும் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment