பறக்கும் வாகனத்தை வடிவமைத்து, அறிமுகப்படுத்தியிருக்கிறது அமெரிக்க நிறுவனம்.
கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வில், அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்கை பறக்கும் வாகனம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ப எந்த மாசுவையும் வெளிப்படுத்தாத, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கக் கூடியது.
ஸ்கை (Skai {pronounce: sky}) என்ற பெயரில், 5 பேர் அமரக்கூடிய இந்த பறக்கும் வாகனத்தை அலக்கா-ஐ டெக்னாலஜிஸ் (Alaka'i Technologies) நிறுவனம், வடிவமைத்திருக்கிறது.
ட்ரோன் மற்றும் ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனம் 6 சுழலிகளின் உதவியுடன், நிறுத்திவைக்கப்பட்ட இடத்திலிருந்து, செங்குத்தாக மேலெழும்பி பறக்கும் திறன்படைத்ததாகும்.
எந்த மாசையும் வெளிப்படுத்தாத, மாற்று எரிபொருள்களில் ஒன்றான, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து 644 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் வல்லமை படைத்த இந்த ஸ்கை வாகனம், 454 கிலோ எடை சுமந்து செல்லும் திறன் உடையது.
எஸ்.யூ.வி மாடல் கார் போல் காட்சியளிக்கும் இந்த ஸ்கை பறக்கும் வாகனத்தை, டாக்சியாகவும், ஆம்புலன்சாகவும் பயன்படுத்தலாம்.
0 comments:
Post a Comment