வத்தளை மாபோல பிரதேசத்தில் நேற்று இரவு ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 04 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 08 மணியளவில் மாபோல, துவவத்தை பிரதேசத்தில் சில வீடுகளுக்கு திப்பரவியுள்ளது.
சில வீடுகளுக்கு தீப்பரவியதையடுத்து கொழும்பு தீயணைப்பு படையினர், கடற்படையின் தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீயினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுடன், வீடொன்றில் இருந்த சுமார் 30 ஆடுகள் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்ஒழுக்கு காரணமாக தீப்பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment