உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலில் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு விரைவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு முதற் கட்டமாக ஐந்து மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக முதற் கட்டமாக பத்து மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு தேவாலயங்களும் இராணுவத்தினரால் புனரமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்த்ட்டுள்ளார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை கடற்படை புனரமைக்கவுள்ளது. புனரமைப்புப் பணிகளுக்காக முதற் கட்டமாக பத்து மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.
புனரமைப்புப் பணிகளுக்கு தேவையான நிதி மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் முழுமையான நிதி வழங்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment