அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு ஈரானுடனான அதன் பாரம்பரிய நட்பு உறவுகளை பேணுவதற்கு ஜப்பான் விரும்பம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாத் ஜரிஃப் அகியோருக்கிடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போதே ஈரானுடன் தொடர்ந்தும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே விரும்பம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜப்பான் தலைநகரில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் தொடர்பாக பிரதமர் ஷின்ஜோ அபே கவலை வெளியிட்டிருந்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கை ஒன்றிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்னர் அமெரிக்கா வெளியேறியிருந்தது. இதனை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்திருந்தது.
ஈரானின் தாக்குதல் திட்டம் மற்றும் அணு ஆயுத முடக்கம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மத்திய கிழக்கில் துருப்புக்களை நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துவருவதாக செய்திகள் வெளியாகின.
இதனை அடுத்து இரு நாட்டு தலைவர்களும் எதிர் எதிர் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நேற்று மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கு எதிராக நடவடிக்கைக்காக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட துருப்புக்களை அனுப்பும் செய்தியை ட்ரம்ப் நிராகரிப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment