யாழ்ப்பாணம், கொக்குவில், தலையாழிப் பகுதியில் இன்றையதினம் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பு நடவெடிக்கையை முன்னெடுத்தனர்.
சுற்றிவளைப்பின்போது, குறித்தபகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள் எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டைவிட்டு வீதியில் இறங்கவோ அனுமதிக்கப்படவில்லை.
வீட்டில் இருப்பவர்கள் தொடர்பில் பதிவுகள் இடம்பெற்றதோடு வீடுகளும் பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டது. அவ்வாறு சோதனைக்குட்படுத்தபட்ட வீடுகள் இராணுவத்தினரால் சிறிய சுவரொட்டி ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது.
நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் முப்படைகள் களம் இறக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்ட நிலையில் யாழ். மாவட்டத்தில் தொடர் சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment