ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட அரசாங்கத்தின் எம்.பி க்கள் சிலர் பயங்கரவாத எதிரிப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு சமூகத்தின் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வந்துள்ளதுடன் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தங்களுடன் முன்வைக்க வேண்டுமென கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள.
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதானிகள் தெரிவித்திருந்தனர்.
அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் சில எம்.பி க்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மறுத்துள்ளதுடன் அது தொடர்பிலான பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது மக்கள் பக்கம் நின்று தீர்மானம் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித்தேர்தல் இடம்பெற சில மாதங்களே உள்ள நிலையில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை எனவும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு மேலதிகமான சட்டதிட்டங்கள் உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment