லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வான் சஹரானின் மனைவியை காத்தான்குடி அழைத்துச் செல்லவும் கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வாள்களை விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டுளது. லேக்ஹவுஸ் வான் சாரதி கைது.
லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பத்திரிகைளை விநியோகிக்கும் வானில் , கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வாள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
சஹரானின் மனைவியை , இதே வானில் பாணதுறையிலிருந்து கொழும்புக்கு ஏற்றி வந்து காத்தான்குடி வரை அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அதற்காக கொழும்பிலிருந்து காத்தான்குடிக்கு பத்திரிகைகளை விநயோகிக்கும் LL - 0842 எனும் லேக்ஹவுஸ் வான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத் தகவலை லேக்ஹவுஸ் நிறுவனத்திலிந்தே வெளிவரும் 'மான்ஞ்சு' (கை விலங்கு) எனும் பத்திரிகையின் பாதுகாப்பு கண்ணோட்டங்களை எழுதிவரும் ஊடகவியளாளர் தக்சிலா ஜயசேகர 2019.05.07ம் திகதி பந்தி ஒன்றில் எழுதியுள்ளார்.
அவர் சஹரானின் மனைவி கொழும்பு 'ரீகல்' திரையரங்கு அருகே இருந்து அந்த வானில் ஏறியதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த வானின் சாரதியான ரிபாஸ் குற்றவியல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வானை பாவித்து கொழும்பிலுள்ள பல பகுதிகளுக்கு வாள்களை கொண்டு செல்லவும் இந்த வான் பயன்படுத்தப்பட்டுள்ளது என அந்த பந்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 16ம் திகதி காலையில் தினமின (தினகரனின் சிங்கள பதிப்பு) அறையை அண்மித்த பகுதி வழியாக உணவகத்துக்கு செல்லும் படிகள் அருகே உள்ள இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் அறையிலிருந்து சிங்கள பெயரில் உள்ள தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச் சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பின்னர் கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
லேக்ஹவுஸ் சேவகர்கள் அங்கு 100 தேசிய அடையாள அட்டைகளும் 50 கடவுச் சீட்டுகளும் கிடைத்துள்ளன எனச் சொல்கிறார்கள். ஆனால் கோட்டை போலீசாரிடம் 50 மட்டுமே கையளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள். மற்றவைக்கு என்ன நடந்தன?
லேக்ஹவுஸில் 1700 ஊழியர்கள் பணியாளர்களாக உள்ளனர்.
0 comments:
Post a Comment