வெசாக் கூடுகளை தீயிட்டு கொளுத்திய இளைஞர்கள்

சாலியவெவ பிரதேசத்தில் இளைஞர் குழுவொன்றால் தயாரிக்கப்பட்டிருந்த 500 வெசாக் கூடுகளை காட்சிபடுத்துவதற்கு பொலிஸார் அனுமதியளிக்காத நிலையில், குறித்த வெசாக் கூடுகளை இளைஞர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று, சாலியவெவ பிரதேசத்தில் பௌத்த மற்றும் கத்தோலிக்க இளைஞர்கள் இணைந்து வெசாக் கூடு தொகுதியொன்றை தயார் செய்திருந்த நிலையில், அவற்றில் ஒரு புறம் பௌத்தர்களின் சின்னமும் மறுபுறம் கத்தோலிக்கர்களின் சிலுவை சின்னமும் பொறிக்கப்பட்டமையால் அங்கு முறுகல் நிலையொன்று ஏற்பட்டது.
இதன்பின்னர் பொலிஸாரால் குறித்த வெசாக் கூடுகளை காட்சிபடுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் மேலும் முரண்பட்டுக்கொண்ட இளைஞர்கள், தாம் தயாரித்த வெசாக் கூடுகளை வீதியில் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment