யாழ்.மாவட்டத்தின் பிரதேச செயலகங்களுக்கு இடையிலான உயரம் பாய்தலில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை சேர்ந்த எஸ். ஹெரீனா தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான தடகளத் தொடர் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் பெண்களுக்கான உயரம் பாய்தலில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவம் செய்த எஸ். ஹெரீனா 1.59 மீற்ரர் உயரப் பாய்ந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
எஸ். சுவர்ணா 1.42 மீற்ரர் உயரப் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும், க.நிறோசினி 1.39 மீற்ரர் உயரப் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
0 comments:
Post a Comment