கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய சென். செபஸ்டியன் தேவாலயத்தில் இன்று முதன்முறையாக பிரார்த்தனை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், ஆலய வளாகத்தில் இன்று காலை பிரார்த்தனை நடத்த மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆலய பங்கு மக்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமாத்திரமன்றி நீர்கொழும்பின் சகல வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, ஆலயத்தை அண்மித்த வீதியில் பயணிக்கும் சகல வாகனங்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment