அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வழி உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அரசாங்கத்திலுள்ள கிறிஸ்தவ அமைச்சர்கள் எவரும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக மாட்டார்கள். அவ்வாறு எதிர்த்தால், அவர்களது சமூகத்துக்கு முகம்கொடுக்க முடியாமல் போகும்.
இந்த நிலைமையினால் அரசாங்கம் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ எம்.பி. சுட்டிக்காட்டினார்.
நாடு முகம்கொடுத்துள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, அரசாங்கத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதே மிக முக்கியமான தேவையாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment