குண்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்றார் கரவெட்டி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த இ.நிமலேந்திரா.
யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான தடகளப்போட்டிகள் யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதில் ஆண்களுக்கான குண்டு போடுதலில் 13.26 மீற்றர் தூரம் எறிந்து கரவெட்டிப் பி.தேச செயலகத்தைச் சேர்ந்த இ.நிமலேந்திரா தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
11.68 மீற்றர் தூரம் எறிந்து பருத்தித்துறை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த எஸ்.மிதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தையும்,, 11.34 மீற்றர் தூரம் எறிந்து நல்லூர் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த எஸ். வாகீசன் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர்.
0 comments:
Post a Comment