திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலின் உண்டியலில் தினமும் கோடிக்கணக்கான பணம் மற்றும் காணிக்கைகள் குவிந்து வருகிறதாம்.
இந்த காணிக்கைகளில் புழக்கத்தில் இல்லாத நாணயங்களும் வருவதுண்டு.
இவ்வாறு புழக்கத்தில் இல்லாத நாணயங்கள் மட்டும் சுமார் 90 டன் அளவுக்கு கோவில் நிர்வாகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் புழக்கத்தில் இல்லாத நாணயங்களை தனியே எடுத்து பாதுகாத்து வைத்திருக்கும் திருப்பதி கோவிலின் தேவஸ்தான நிர்வாகம், இந்த நாணயங்களை வாங்கிக்கொள்ள ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்ததாம்.
இந்தக் கோரிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் இருக்கும் 90 டன் புழக்கத்தில் இல்லாத நாணயங்களை எடை போட்டு, டன் ஒன்றுக்கு ரூ.27 ஆயிரம் விலை கொடுத்து வாங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
0 comments:
Post a Comment