வெசாக் தினத்தன்று விகாரையில் வழிபாட்டில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்ட நபர் ஒருவர், அந்த விகாரையின் விகாராதிபதிக்கு கோடாரியினால் தாக்கிய சம்பவமொன்று ராஜாங்கனயாய 02 துட்டுகெமுனு பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
வெசாக் போயா தினமான நேற்றிரவு 8.00 மணிக்கு மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தனக்கு விகாரையில் வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என அனுமதி கேட்டுள்ளார். அவ்வேளையில், அவர் மது போதையில் இருந்ததனால், அவருக்கு அனுமதி வழங்க விகாராதிபதி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
பின்னர் மீண்டும் வீட்டுக்குச் சென்று விட்டு 8.30 மணியளவில் விகாரைக்கு திரும்பிய அந்த நபர் விகாராதிபதியிடம் மீண்டும் அனுமதி கோரியுள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த விகாராதிபதியை கோபம் கொண்டு தனது இடுப்பில் இருந்த கோடாரியினால் தாக்கியுள்ளார்.
இதன்போது, அருகில் இருந்தவர்கள் விகாராதிபதியை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடாத்திய நபர் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இப்பிரதேசத்தைச் சேர்ந்த தோட்டங்களில் கூலி வேலை செய்யும் ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் விகாரையிலேயே தான் வந்த மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment