ஐஎஸ் அமைப்பு தனது இருப்பை வெளிப்படுத்துவதற்காக இலங்கையில் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிபிசியின் பிராந்திய மொழிச்சேவையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் அவர்கள் ஏன் இலங்கையில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலகின் வலுவான நாடுகளுடன் நேரடியாக மோதுவதற்கான திறன் இல்லாத காரணத்தினாலா ஐஎஸ் அமைப்பு அமைதி நிலவும் நாடொன்றில் தாக்குதலை மேற்கொள்வதற்கு தீர்மானித்தது என நான் கேள்வி எழுப்பவிரும்புகின்றேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் அமைப்பு தான் இன்னமும் அழிந்துவிடவில்லை என்பதை சொல்வதற்காக தனது இருப்பை வெளிப்படுத்துவதற்காக இலங்கையில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்ததா எனவும் சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
புலனாய்வு பிரிவின் உயர் மட்டத்தில்உள்ளவர்களிற்கு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற தகவல் கிடைத்தது எனினும் அவர்கள் அதனை எனக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்கள் கடமையை புறக்கணித்தனர் அதன் காரணமாகவே நான் நடவடிக்கை எடுத்தேன் என தெரிவித்துள்ள சிறிசேன இவர்களை பதவியிலிருந்து நீக்கியுள்ளேன், விசாரணைகளிற்காக குழுவொன்றை நியமித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் எந்த நாட்டிலும் குண்டுவெடிப்பினை தொடர்ந்து ஜனாதிபதி பதவிவிலகுவதில்லை எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த சவாலை எதிர்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதே எனது பணி என நான் கருதுகின்றேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment