முல்லைப்.பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வு தர வேண்டும் - சாள்ஸ்நிர்மலநாதன்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வரும் ஜனாதிபதி இங்கு மக்கள் எதிர்நோக்கு கின்ற பிரச்சனைகளை ஆராய்ந்து, அதற்குரிய தீர்வை வழங்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்நிர்மலநாதன்.

புதுக்குடியிருப்பு தேராவில் நஞ்சுண்டான் குளத்தின் புனரமைப்புப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேரில் சென்று பார்வையிட்டார்  
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,


முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலம் மக்கள் கோரிக்கை விட்ட விவசாய பிரச்சினைக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக  புனரமைப்புச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த குளம் வன இலாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதனை புனரமைக்க முடியாத சூழல் இருந்தது. குளத்தைப் புனரமைக்க ஜனாதிபதியை சந்தித்து  குளம் புனரமைப்பிற்காக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது வனவளத் திணைக்களத்திற்கு உரிய அனுமதியைத் தரவேண்டும் எனக் கேட்டிருந்தேன் அவர்தான் இந்த திணைக்களத்தின் அமைச்சராக இருக்கின்றார்.

ஜனாதிபதியின் பணிப்புரை தற்போது கிடைத்துள்ளது. மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரிக்கு அதன் அனுமதி கிடைத்துள்ளது.   புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அதிகாரிகள், வனவஇலாக திணைக்கள அதிகாரிகள்,கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவிஆணையாளர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் நான்கு கிராம மக்கள் உள்ளிட்ட வர்கள் இந்த குளத்ததைப் பார்வையிட வந்துள்ளோம்.



போர் முடிவடைந்த பின்னர் மக்களுக்கு விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசன வசதிகள் மற்றும் நிலங்களை  அரசு செய்துகொடுக்க வேண்டும் இன்று இருக்கும் சூழ்நிலையில் விவசாயம் செய்வதற்குரிய வசதிகள் நீண்ட முயற்சியின் பின்னர் மிகச் சொற்ப அளவில் கிடைக்கின்றது.

இதற்கு சரியான திட்டமிடல் செய்து ஒவ்வொரு மாவட்டமாக வனஇலாக திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கமநலசேவை திணைக்களம், நீர்பாசன திணைக்களம் அடங்கலாக மாவட்ட அரச அதிபரின் உதவியுடன் எந்தெந்த கிராமங்களில் நீர்பாசன வசதிகள் செய்து கொடுக்கவேண்டும் என்று திட்டமிடல் செய்ய வேண்டும். அந்தத் திட்டமிடல்களை மக்களுக்கு செய்துகொடுக்க வேண்டிய பெறுப்பு அரசுக்கு உரியது.


எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி  முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதர இருப்பதாக மாவட்டச் செயலம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நீண்டகால பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் நேரடியாக ஆராய வேண்டும்.

வடக்கு கிழக்கு இணைந்த செயலணி கூட்டங்களிலும் தொல்பொருள் திணைக்களத்தின் பௌத்த மயமாக்கல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பது, மகாவலி  வலயத்தில் தமிழர்களின் நிலங்கள் பறிப்பது அந்த மக்களுக்கு விவசாய காணிகள் கொடுக்ப்படாமை  போன்ற பிரச்சினைகளை ஜனாதிபதியுடன் கதைத்தபோது குறிப்பிட்ட காலத்தில் சீர்செய்வதாக சொல்லியிருந்தார். ஆனால் கதைத்து ஒராண்டு  ஆகியும் மகாவலி தொடர்பில் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு தரவில்லை -என்றார்.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment