வவுனியாவில் இளைஞர்கள் குழு ஒன்று கூரிய ஆயுதங்களால் மேற்கொண்ட தாக்குதலில் எழுவர் காயமடைந்துள்ளனர்.
தாலிக்குளம் பகுதியில் நேற்று மாலை வீடு புகுந்த இளைஞர் குழு அங்கிருந்தவர்கள்மீது வாள், கத்தி, பொல்லு, போத்தல் போன்ற கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் காயமடைந்த 3 பெண்கள் உட்பட எழுவர் வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
வவுனியா, தாலிக்குளம் பகுதியில் கடந்த புதன் கிழமை திருமண வைபவம் ஒன்றின்போது இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் இரு பகுதியினருக்கு இடையில் கடும் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து முரண்பட்டுக் கொண்ட ஒரு பகுதி இளைஞர் குழுவே நேற்று மாலை தம்முடன் முரண்பட்ட மற்றைய குழுவினர் வீட்டில் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment