வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடும் வெயிலால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகையில், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய வெப்பம் நேரடியாக தாக்கும் வகையில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பகுதியில் 4 செமீ மழை பதிவாகி உள்ளது. தேனி மாவட்டம் பெரியார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தலா 3 செமீ மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment