மட்டக்களப்பில் ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளநல ஆற்றுப்படுத்தும் முகமாக தொண்டர்களைத் தயார்படுத்தும் பயிற்சிநெறி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் இன்று (வியாழக்கிழமை) கல்லடியில் அமைந்துள்ள கிறீன்கார்டன் விடுதியில் இந்த பயிற்சிநெறி இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் 30 தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் த.கடம்பநாதன், உளநல பயிற்றுவிப்பாளர் பெலிசியன் ஆகியோர் கலந்துகொண்டு தொண்டர்களுக்கு உளநலம் தொடர்பான பயிற்சிகளையும் விளக்கங்களையும் வழங்கினர்.
இப்பயிற்சிநெறி 17ஆம் திகதி மாலையுடன் நிறைவுபெறவுள்ளதுடன், இப்பயிற்சிநெறியின் முடிவில் கலந்துகொண்ட தொண்டர்களுக்கு சான்றிதழ்கழும் வழங்கப்படவுள்ளன.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் த.வசந்தராசா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிழ்வில் செயலாளர் சா.மதிசுதன், கிளை நிறைவேற்று உத்தியோகஸ்த்தர் வி.பிறேமகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இப்பயிற்சிநெறியின் முடிவில் தற்கொலைக்கு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடத்தில், தொண்டர்கள் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு உளநல ஆற்றுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா இதன்போது தெரிவித்தார்.
0 comments:
Post a Comment