பைனலுக்கு போகப்போவது யாரு

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 2வது தகுதிச்சுற்றில் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளில் வெற்றிப் பெறும் அணி பைனலில் மும்பையுடன் மோத ஐதராபாத் புறப்படும்.

சென்னையில் செவ்வாய்கிழமை நடைப்பெற்ற முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில்  சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடைப்பெற்ற வெளியேறும் சுற்றில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை டெல்லி அணி போராடி சென்றது. அதனால் இன்று விசாகப்பட்டினத்தில்  நடைபெறும் 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை - டெல்லி அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றிப்பெறும் அணி நாளை மறுதினம் ஐதராபாத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் விளையாடும்.

இறுதிப்போட்டிக்கு முன்னேற கடைசி வாய்ப்பு என்பதால் இரண்டு அணிகளும் வெற்றிக்கு வேகம் காட்டும். அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. டெல்லி அணி இதுவரை 3முறை மட்டுமே அரையிறுதி/தகுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
 அந்த அணி 11 ஐபிஎல் தொடர்களில் விளையாடி  2008ம் ஆண்டு 4வது இடமும், 2009, 2012ம் ஆண்டுகளில் 3வது இடமும் பிடித்தது.

பலமுறை லீக் போட்டிகளில் கடைசி இடத்தைதான் டெல்லி பெற்றது. இந்த முறை பெயர் மாற்றத்துடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ள அணியாக பரிமளித்தது.




Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment