பாகிஸ்தான் அகதிகளை வடக்கில் குடியேற்றுவதானது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் அவர்களை பாதுகாப்பாக குடியேற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே சிவாஜிலிங்கம் இதனைக் கூறினார்.
அத்துடன் இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு பணம் கொடுக்காத நிலையில், அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளுக்கு கொழும்பை அண்மித்த பகுதிகளே சாதகமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, வடக்கில் அவர்களைக் குடியேற்றுவது சாதகமானதாக அமையாதது என்பதுடன், இந்த விடயம் தேவையில்லாமல் மக்கள் மத்தியில் சர்ச்சைகளையே ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
மேலும், வடபகுதி இந்தியாவுக்கு அருகாமையில் இருக்கின்ற நிலையில், இவ்வாறு பாகிஸ்தான் அகதிகளைக் கொண்டு வருகின்றபோது, அவர்களுள் பாகிஸ்தான் உளவாளிகள் வருவார்களாயின் இந்தியாவின் பாதுகாப்புக்கும் அது அச்சுறுத்தலாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment