பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் சில காட்சிகள் சென்னை மின்சார ரயிலில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் மித்ரன், அதற்கான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அதில் படத்தில் இயக்குநர் மித்ரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் படியில் தொங்கியபடி பயணித்துள்ளனர்.
கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக அர்ஜூன் நடிக்கிறார். அவருடன் நாச்சியார் பட நடிகை இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
0 comments:
Post a Comment