கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கண்டறிவதற்கு இந்தியாவில் செயற்படும் தேசிய விசாரணை முகவர் அமைப்பான என்.ஐ.ஏ. யின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (30) இலங்கை வந்துள்ளது.
இந்திய பொலிஸ் பிரதானி ஆலோக் மிதால் தலைமையில் அமைந்த அதிகாரிகள் குழுவே இந்த விசாரணைக்காக இலங்கை வந்துள்ளது.
இலங்கைக்கு பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்தியாவுடன் நடாத்தி வந்ததாக கூறப்படும் தொடர்புகள் குறித்து விசாரணை செய்வது இந்த குழுவின் வருகைக்கான நோக்கம் எனவும் கூறப்படுகின்றது.
இலங்கை மீது நடாத்தப்பட்டது போன்ற ஒரு பயங்கரவாதத் தாக்குதலை இந்தியாவுக்கு மேற்கொள்ளப்படுவதிலிருந்து தவிர்ப்பது இந்த குழுவின் வருகைக்கான மற்றுமொரு நோக்கம் எனவும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பயங்கரவாதி சஹ்ரான் என்பவன் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் கேரலா பிராந்தியங்களில் காணப்படும் நபர்களுடன் முன்னெடுத்த தொடர்புகள் குறித்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதும் இக்குழுவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment