தரையில் வளைதோண்டி வாழும் புதிய வகை ஆந்தை குறித்து ஆய்வாளர்கள் தீவிரமான ஆய்வொன்றை நடத்தி வருகின்றனர்.
இந்த புதிய வகை ஆந்தைகள் கொலம்பியாவில் தரையில் வளை தோண்டி வாழ்கிறது.
ஆந்தைகள் பகலில் மந்தமாகவும், இரவில் சுறுசுறுப்பாகவும் இயங்கும் உயிரினமாகும். மரங்களில் உள்ள பொந்துகளை தங்கள் இருப்பிடமாகக் கொண்டு வசித்து வருபவை என்ற வரலாறுதான் இத்தனை காலமும் இருந்தது.
ஆனால் முதன்முறையாக கொலம்பியாவில் புதிய ஆந்தை இனம் ஒன்று பகலில் மிகவும் சுறுசுறுப்பாக ஓடியாடி இரைதேடி வருவது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதுஒருபுறம் இருக்க தானே கால்களைப் பயன்படுத்தி வளைதோண்டி அதனுள் வாழும் தன்மையையும் இந்த ஆந்தைகள் கொண்டுள்ளனவாம்.
மற்றைய ஆந்தைகளைப் போல அல்லாமல் பகல், இரவு என இருவேளைகளிலும் சுறுசுறுப்பாக இந்த வகை ஆந்தைகள் வேட்டையாடி வருகின்றன. தற்போது இந்த வகை ஆந்தைகள் குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment