அரசியல் கருத்துக்கள்; சமூகம் தொடர்புடைய கருத்துக்கள் என்று அதிரடியாக எதையாவது சொல்லி, அதன் மூலம், சர்ச்சையை உண்டு பண்ணுகிறவர் நடிகை கஸ்தூரி. இப்படித்தான், சமீபத்தில், சென்னை அணி, ஐ.பி.எல்., போட்டியில் மெதுவாக விளையாடியதைப் பார்த்து விட்டு, என்ன வாத்தியார் லதா அம்மாவை தடவுற மாதிரி தடவிகிட்டு இருக்காங்கன்னு, டுவிட்டரில் கருத்து போட்டார். இதற்கு கடும் விமர்சனம் எழ வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், அவர் தான் முஸ்லிம் போல உடையணிந்து, தொழுகை செய்வது போல இரு படங்களை வெளியிட்டு, புதிய படமொன்றில் முஸ்லிம் பெண் வேடத்தில் நடிக்கிறேன், ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரமலான் நோன்பு ஆரம்பமாகி விட்டதால் அதற்கு பொருத்தமாக இப்படங்களை வெளியிடுவதாக கூறினார். மேலும், நாம் அனைவரும் ஒரே கடவுளை ஒரே நோக்கத்துக்காகத்தான் வழிபடுகிறோம். ஆனால், வழிபடும் வார்த்தைகள் மட்டும் வெவ்வேறானவை என குறிப்பிட்டிருக்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment