நாய் போன்று வடிவமைக்கப்பட்ட ரோபோ ஒன்று விமானத்தை இழுத்துச் சென்று சாதனை படைத்துள்ளது.
இத்தாலிய தொழில்நுட்பக் கழகத்தினர் இதனை உருவாக்குயுள்ளனர்.
இயற்கை அனர்த்தங்களின்போது, பயன்படுத்தும் வகையில் ஹை க்யூ ரியல் (HyQReal) என்ற பெயரில் நாய் போன்று செயலாற்றக் கூடிய ரோபோவை வடிவமைத்துள்ளனர்.
ரோபோவின் இழுவைத் திறனைச் சோதிக்க விரும்பிய அவர்கள் விமானம் ஒன்றை இழுக்க வைக்க முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இதன் கால் பகுதிக்கு வழுக்காமல் இருக்க சிறப்பு ரப்பர் பொருள் பொருத்தப்பட்டது.
இதையடுத்து 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட சிறிய ரக விமானத்தை ஹை கியூ ரியல் இழுத்துச் சென்றது.
வெறும் 127 கிலோ எடை கொண்ட அந்த ரோபோ விமானத்தை 30 அடி தூரம் இழுத்துச் சென்றது.
குறிப்பிட்ட ரோபோவை செயல்பாட்டுக்கு கொண்டுவரவிருப்பதாக அதனை உருவாக்கியவர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment