பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவப் பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனரும் இதன்போது விடுவிக்கப்பட்டார்.
மூவரையும் ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடந்த 3 ஆம் திகதி பல்கலை வளாகத்துக்குள் விடுதலைப்புலிகளின் படங்களை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இந்த மூவரும் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விடுவிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment